தமிழகம்

மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய யூடியூப் சேனல்கள் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Do Not Kiss, Fondle Or Sleep Alone With Children: Centre's Manual On  “Living Conditions In Institutions For Children In Conflict With Law”

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 11-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், ஆசிரியர் ஒருவரின் தொடர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவி 11-ம் வகுப்பு படித்த தனியார் பள்ளியில் . பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும்’ இதனால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

அதோடு மாணவி எழுதிய கடிதமும் சிக்கியது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும், பெங்களுரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ  தமிழகத்தில் வரும் செப் .12 - ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறினார் .
கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள் மீது  வழக்குப் பதிவு | Dinamazhai

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களும், யூடியூப் சேனல்களும் செய்தி வெளியிட்டன. அப்போது மாணவியின் பெயர், அவர் வசித்து வந்த இடம் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டன.

போக்சோ சட்டத்தின் கீழ், 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும்போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ  கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்….

இதனால் மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தஞ்சை பெரிய கோயில் கலசம்..தங்க முலாம் பூச வீட்டையே அடமானம் வைத்த தமிழர்

naveen santhakumar

மதுரை புத்தக தாத்தா காலமானார்

naveen santhakumar

அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து தர திருநெல்வேலி மாநகராட்சி புதிய முயற்சி….

naveen santhakumar