தமிழகம்

தடுப்பூசி போட்டுக் கொள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயக்கம் – அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

கொரானா தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடதப்பட்டது.

தமிழ்நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில்,
80.3 சதவீத ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை - எய்ம்ஸ்…! 
Pakistan kicks off COVID vaccination drive for senior citizens |  Coronavirus pandemic News | Al Jazeera

18 முதல் 44 வயதுடையர்கள் 16.9 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டியுள்ளனர்.
45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27.6 சதவீதம் பேர் தடுப்பூசி குறித்து மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் நகர் புறங்களில் 82.5 சதவீதம் பேரும், கிராம புறங்களில் 79.7 சதவீத பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வங்கி ஊழியர்கள் திட்டியதால் விவசாயி தற்கொலை…!

News Editor

மனைவி இறந்த துக்கத்தில் தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவர்:

naveen santhakumar

3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது?

Shanthi