தமிழகம்

சத்குருவின் “கோவில் அடிமை நிறுத்து” கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம் சார்பாக,ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கோவில் அடிமை நிறுத்தி என்ற கோரிக்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஜக்கி வாசுதேவ் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவில் அடிமை நிறுத்து என்ற தலைப்பில் மிஸ்டு கால் எங்களையும் அறிமுகம் செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம் சார்பாக ஜக்கி வாசுதேவ் அவர்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 அப்போது சத்குருவிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அதில்…

1.இந்தியா முழுவதும் தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களில் அதிகமாக உள்ளது. அதை தமிழர்களின் மெய்யியல் வழிபாட்டு முறையில் வழிபட மீண்டும் தமிழக அரசிடமே அல்லது தமிழர்கள் மெய்யியல் வழிபாட்டு அமைப்பை உருவாக்கி அந்த குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஏன் சத்துரு கூறவில்லை.

ALSO READ  தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு?

2. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களை தமிழரிடம் தரவேண்டும் என்று ஏன் சத்குரு அவர்கள் கூறவில்லை.

3.இந்தோனேஷியாவில் உள்ள சிவன் கோயிலில் தேவாரம் திருவாசகம் காட்டப்படுகிறது, பாடப்படுகிறது ஆனால் அதை மாற்றி விட்டு சமஸ்கிருதம் பாட வேண்டும் எனவும் அதனால் இந்தியாவில் இருந்து எங்கள் பிராமணர்களை அனுப்புகிறோம் என்று இந்திய அரசின் சார்பில் கேட்ட போது சிவனின் பெயரை சொல்லி உலகம் முழுவதும் வசூல் செய்யும் நீங்கள் அதைக் கண்டிக்காமால்  மௌனமானது ஏன் ?

4. முல்லைத்தீவில் உள்ள ஆதி அய்யனார் கோவில் இடித்துவிட்டு புத்த விகாரை கட்டினனர். அதே இடத்தில் தொல்லியல் ஆய்வு செய்தபோது எண்கோண வடிவ சிவலிங்கம் கிடைத்தது அதை ஏன் மீண்டும் சிவன் ஆலயமா கட்ட நீங்களும் இங்கு இந்து மதத்தை சுமந்து நிற்கும் சில கூட்டங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

ALSO READ  "கோடியில் ஒருவன்" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

5. தமிழர் அடையாளங்களான கோயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தின் பின்னணி என்ன என்று உங்களை பைத்தியமாக சுற்றும் கூட்டத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான தமிழர் மெய்யியல் கோட்பாட்டை கற்றல் வழி வழியாக வந்த தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அது எப்போது மீட்கவேண்டும், பராமரிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் .எனவே தங்களின் ஆசிரமத்தையும் ஒரு நாள் நாங்கள் பராமரிக்கும் சூழல்நிலை வரும் என்பதை இந்த நேரத்தில் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர நினைக்கின்றோம். என ஆர்ப்பாட்ட குழுவினர் கூறினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை- நீலகிரி ஆட்சியர்… 

naveen santhakumar

90s ஃபேவரைட் விஜே ஆனந்தக்கண்ணன் திடீர் மறைவு- என்ன நடந்தது?

naveen santhakumar

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு..!

News Editor