தமிழகம்

கடைகள்,நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இருக்கை வசதி அளிப்பது கட்டாயம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்கை வசதி அளிப்பது கட்டாயம் என தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்ட திருத்த முன்வடிவை தாக்கல் செய்துள்ளது.

சட்டப்பேரவையில் பேசிய தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுகின்றனர். கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரம் முழுவதும் நிற்கும் பணியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இருக்கை வசதி வழங்குதல் அவசியமாகிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற மாநில தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட்கூறானது முன்வைக்கப்பட்டது. பின்னர் குழுவின் உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே அரசு 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். -சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
ALSO READ  சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ‘All Pass’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி ……

naveen santhakumar

அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை – தமிழக அரசின் அரசாணை!

naveen santhakumar

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத்தொகை 498 கோடியை வழங்கினார் முதல்வர்…!

naveen santhakumar