தமிழகம்

2022 ஜனவரி 5-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. தற்போது 1¾ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் ஜனவரி 5-ந்தேதி சட்டசபை கூடுகிறது.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 2022ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு நேற்று தெரிவித்தார்.

ALSO READ  ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் ? முதல்வர் இன்று ஆலோசனை
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம்: ஜனவரி 5-ந்தேதி கூடுகிறது  || TN Legislative Assembly will convene January 5

கவர்னர் உரையைத் தொடர்ந்து பொது பட்ஜெட், மானிய கோரிக்கைகள் ஆகியவற்றிற்கான கூட்டத்தொடர்களும் அடுத்தடுத்து நடைபெறும்.

வரும் சட்டசபை கூட்டத்தொடரின்போது தொடுதிரைகள் கண்டிப்பாக அனைத்து உறுப்பினர்களின் மேஜையிலும் வைக்கப்பட்டிருக்கும். காகிதமில்லா பட்ஜெட்டாக சட்டசபையை தொடங்கினோம்.

அதுபோன்றே எல்லா சட்டசபை பணிகளும் காகிதமில்லாமல் தொடுதிரை உதவியுடன் நடத்தப்படும்.

ALSO READ  தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளவர்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்ப முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள்

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சட்டசபை செயலகத்தின் கவனத்தில் உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு !

News Editor

ஜூன் 18-ம் தேதி சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை…

naveen santhakumar

அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் 15 நாட்கள் கடைகளை அடைக்க தயார்- வணிகர் சங்கப் பேரவை… 

naveen santhakumar