தமிழகம்

தமிழக அரசின் புதிய சேனல் தொடக்கம்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் பிரசித்தி நிகழ்வுகளை ஒளிபரப்ப “திருக்கோவில்” பெயரில் புதிய தொலைக்காட்சியை தமிழக அரசு தொடங்க உள்ளது.

மக்கள் வீட்டில் இருந்தே சுவாமி தரிசனத்தை கண்டு களிக்கும் வகையில் திருக்கோயில் தொலைக்காட்சி என்ற சேனலை தொடங்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 8.77 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்ய அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வீடியோ கிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து, அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

ALSO READ  செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ் நாடு அரசு முடிவு

1. கோயில் வளாகம், முகப்பு விமானங்கள், கோபுரங்கள், கோவில் பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள் இடம் பெற வேண்டும்

2. கோவில் அமைந்துள்ள இடம், கோயில் தலவரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன் இடம்பெற்றிருக்க வேண்டும்.

3. கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள் இசையுடன் இடம் பெற்றிருக்க வேண்டும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாகப் 30 வினாடிகள் பதிவு செய்ய வேண்டும்.

4. கோயில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும். கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரம், தங்க ரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள் நடைபெறும் நேரங்க விபரங்கள் குறிப்பிடவேண்டும்

5. ஒளிப்பதிவு காட்சிகளை கோயில் பணியாளர்கள் இடம் பெறுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் பொழுது அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். சுவாமி உருவங்களை தூரத்திலிருந்து நெருக்கமான காட்சிகளாக மிகவும் அழகாக காண்பிக்கவேண்டும்.

ALSO READ  'இதை என்னால் தவிர்க்க முடியவில்லை' ஸ்டாலின் குறித்து இயக்குநர் பாலா ட்வீட் !

6. தலத்தின் சிறப்பை சொல்லும் பொழுதும், ஓதுவார்கள் பாடும் போதும் அவர்களது உருவத்தை அஞ்சல் வில்லை அளவில் கீழ் ஓரத்தில் காண்பித்தால் போதும். அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது கோயிலின் சிறப்பான பகுதிகளை காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்கவேண்டும்.

7. ஒரு கோயிலின் வீடியோ ஆவணப்படம் தயார் செய்யும்பொழுது அந்த கோயிலின் அனைத்து நிகழ்வுகளும் தொடர் நிகழ்ச்சிகளாக ஒரே சிடியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

8. கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்யும் பொழுது அவற்றின் உப கோயில்கள் குறித்த நிகழ்வுகளையும் சிறப்புகளையும் இடம்பெற செய்திடலாம்.

9. மூலிகை ஓவியங்கள் புராதான கல்வெட்டுக்கள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவு செய்யப் பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது?

Shanthi

டிசம்பர் 1 முதல் கட்டணம் உயர்வு? தமிழக அரசு அதிரடி…!

naveen santhakumar

அன்று ஜெயலலிதா…. இன்று குஷ்புவா????

naveen santhakumar