தமிழகம்

அன்று ஜெயலலிதா…. இன்று குஷ்புவா????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செங்கல்பட்டு:

மதுராந்தகம் அருகே, நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துகுள்ளானதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் தன்னை குறிவைத்தே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு, அவருடைய காரில் வேல் யாத்திரைக்காக, கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கார் சென்றபோது, புதுச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றது. அப்போது குஷ்பு சென்ற கார் மீது, லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி மற்றும் கதவு உடைந்தது.

ALSO READ  மீண்டும் ஊரடங்கை நீட்டிக்கலாமா…?முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள குஷ்பு, அவரை குறிவைத்தே, கண்டெய்னர் லாரி மோதியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் சென்ற கார் சரியான பாதையிலேயே சென்றதாகவும், எங்கிருந்து வந்தது என்று தெரியாத லாரி, கார் மீது மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாறாக கார் கண்டெய்னர் லாரி மீது மோதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்? - அதிமுகவுக்கு ஷாக் தந்த கல்வெட்டு

இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், ” ஜெயலலிதா கார் மீது லாரி மோதிய மாதிரியே. செட்டப்பு??? ஊர் குருவி பருந்தாகுமா? நடிகை குஷ்பு, ஜெயலலிதா ஆக முயற்சி செய்கிறாரா??? என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாடகக்காதலால் அரங்கேறிய சோகம்:

naveen santhakumar

சென்னை பல்கலையின் இலவச கல்வித் திட்டத்தில் 313 மாணவர்களுக்கு கட்டணமில்லா படிப்பு…!!

Admin

காமராஜர் திறந்து வைத்த கிருஷ்ணகிரி அணை.. சுவாரசியமான வரலாறு…..

naveen santhakumar