தமிழகம்

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு தங்களுடைய கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசையை தெரிந்து கொள்ளலாம். இந்த தரவரிசையைக் கொண்டே மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள தேதிகள் ஒதுக்கப்படும்.

பொறியியல் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள்  ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பித்திருந்த 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கு, ஏற்கனவே ரேண்டம் எண் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர்-15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் 1,51,870 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
ALSO READ  தேவர் ஜெயந்தி… அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

naveen santhakumar

அதிர்ச்சி……அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

naveen santhakumar

சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

News Editor