தமிழகம்

‘அவரு சாகல’ – மயங்கி கிடந்த இளைஞர்- தோளில் சுமந்த பெண் ஆய்வாளர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை டிபி சத்திரம் கல்லறையில் மயங்கி கிடந்த இளைஞரை துரிதமாக செயல்பட்டு தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து காப்பற்றிய காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் கடந்த 5 நாட்களாக கனமழை வெளுத்தது வாங்கி வருகிறது.

மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே , கனமழையுடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுந்து வருகிறது.

இந்நிலையில், கீழ்பாக்கம் டி.பி.சத்திரம் கல்லறை தோட்டத்தில் முறிந்து விழுந்த மரத்தின் அருகில் ஒருவர் மயங்கி கிடந்தார். மரம் முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ALSO READ  பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கேட்பு நிறைவு :

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி, முறிந்து விழுந்த மரங்களை அகற்றி இறந்து விட்டதாக கருதப்பட்ட இளைஞரை தனது தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்ததால் அந்த நபர் உயிர்பிழைத்தார். கல்லறையில் மயங்கி கிடந்த இளைஞரை தனது தோளில் வைத்து காவல் ஆய்வாளர் அவரை தூக்கி செல்லும் காட்சி, பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், ஆய்வாளர் ராஜேஸ்வரி பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

ALSO READ  அதிமுக கொடியுடன் வந்தால் நடவடிக்கை; சசிகலாவை எச்சரிக்கும் காவல்துறை !

இதனிடையே, கல்லறையில் மயங்கி கிடந்த இளைஞரின் பெயர் உதயா என்றும் அவர் அதே கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வருபவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கனமழை காரணமாக உதயா கல்லறைக்குள்ளேயே தங்கி இருந்துள்ளார். ஆனால் கனமழை தொடர்ந்ததால் உதயாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே மயக்கமாகி கிடந்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று;ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் !

News Editor

துப்புரவு பணியாளர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

Admin

கோவையில் பரபரப்பு – கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் சிந்திய விவசாயிகள்!

naveen santhakumar