இந்தியா

பாரத் பந்த் – வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் தொடங்கியுள்ளது.

Bharat Bandh News LIVE Updates: Traffic hit, massive jam at Delhi-Gurugram  border - India Today

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

அதேசமயம், வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

ALSO READ  தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை… 

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Delhi Police intensifies patrolling, deploys extra personnel on Bharat Bandh  September 27 farmers protest । भारत बंद को लेकर दिल्ली पुलिस ने गश्त  बढ़ायी, ये राजनीतिक दल भी होंगे शामिल ...

‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இது தவிர பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில அரசுகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ALSO READ  விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கிய மத்திய அரசு...!

நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மூடப்படும். மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்கும் என்றும் அமைதியான முறையில் பந்த் நடைபெறும் என்றும் ”சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

Bharat Bandh by farmers body today from 6 am to 4 pm

பாரத் பந்த் காரணமாக பஞ்சாப், அரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி- மீரட் வரை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Hindistan Rəsmi Saytı 25,000 Pulsuz Oyna Giriş Və Qeydiyya

Shobika

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் விமானங்கள் பறக்க தடை

Admin

சீனாவிற்கு சென்று வந்ததை மறைத்த பெண் கைது….

naveen santhakumar