அரசியல் தமிழகம்

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும், புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் அமைச்சரவை கலந்தாலோசிக்கப்படும்.

ALSO READ  உயர் நீதிமன்றதில், பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தல்..!!

அதேசமயம் புதிய தொழில் திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்புள்ளது. முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றியும் அரசு பரிசீலித்து அறிவிப்பு வெளியிடக்கூடும். இதையடுத்து தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

News Editor

அஞ்சலக தேர்வு இனி தமிழில் எழுதலாம் !

News Editor

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

News Editor