தொழில்நுட்பம்

ஜியோ தான் டாப்… மத்ததெல்லாம் வேஸ்ட்…எதுல தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

4ஜி டேட்டாவை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்வதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தான் முதலிடம் வகிப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு இலவச டேட்டா,கால் சேவை, குறைந்த விலையில் மொபைல் போன் என்ற அதிரடி சலுகையோடு களமிறங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களை கவர்ந்த ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியால் ஐடியா, வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன. தொடர்ந்து பல்வேறு திட்டங்களுடன் அசைக்க முடியாத இடத்தில் ஜியோ உள்ளது.

ALSO READ  பொய் சொல்லலாம்.. அதுக்குன்னு “கொரோனா வைரஸ்” பற்றி இப்படி சொல்லலாமா?

இந்நிலையில் மொபைல் நெட்வொர்க் சேவையில் ஜியோ நிறுவனம் தான் மேம்பட்ட சேவையை வழங்குவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் 4ஜி பதிவிறக்க சேவையில் ஜியோ நிறுவனம் 27.2 mbps வேகத்துடன் முதலிடத்திலும், ஏர்டெல் 7.9 mbps வேகத்தில் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் வோடஃபோன் 6 mbps வேகத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மேப் மை இந்தியா’; கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா..!

News Editor

மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேரிழப்பு… ஷாக் ரிப்போர்ட்..

naveen santhakumar

பஜாஜ் நிறுவனத்தின் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சிறப்பு தள்ளுபடி :

Shobika