உலகம்

இறந்ததாக நினைத்த நண்பர்கள்… திடீரென வந்து அதிர்ச்சியளித்த முதியவர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்காட்லாந்து நாட்டில் இறந்ததாக நினைக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிருடன் வந்து அவரது நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். ஸ்காட்லாந்து நாட்டில் சேர்ந்த ஆலன் என்ற முதியவர் வாழ்ந்து வருகிறார். இவரின் செல்போனுக்கு கடந்த நான்கு மாதங்களாக எந்த வித அழைப்புகளும் வரவில்லை. இதனால் உறவினர்களும் நண்பர்களும் தனக்கு ஏன் போன் செய்யவில்லை என எண்ணி குழம்பி போனார்.

ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு தனது நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க சென்றவருக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவரைப் பார்த்த உறவினர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தார்கள். அதனால் மேலும் குழம்பிப்போன அவர் என்னவென்று விசாரிக்கையில், அவர் இறந்து விட்டதாக நண்பர்கள் நினைத்துள்ளனர்.

ஆலனும் அவரது மனைவியும் ஒன்றாக வாழ்ந்த போது, தாங்கள் இறந்த பிறகு ஒன்றாக புதைக்கப்பட வேண்டும் என அவரது மனைவி விரும்பியுள்ளார்.

ALSO READ  கொரோனா தொற்று: 3 புதிய அறிகுறிகள் அறிவிப்பு…

அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் பெயர் குறித்த ஒரு கல்லறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் இருவரும் பிரிந்து விட்டதால் ஆலனுக்கு கடைசி வரை இந்த விஷயம் தெரியாமல் இருந்தது.

விஷயம் தெரிந்த பின்னர் அந்த கல்லறைக்குச் சென்ற ஆலன் அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர் தான் இறந்த பிறகு இருக்கவே செய்ய வேண்டும் எனவும் இந்த கல்லறையை உறை போட்டு மூட உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 108 பேர் குணமடைந்துள்ளனர்….

naveen santhakumar

இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது!

Admin

சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்களை நாக்கால் நக்கிய மர்ம நபர்கள் – ஏன் தெரியுமா?…

naveen santhakumar