இந்தியா

கொலையா/தற்கொலையா?? தெலுங்கானாவில் ஒரே கிணற்றில் 9 பேர் சடலங்களாக மீட்பு… நீடிக்கும் மர்மம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாரங்கல்:-

தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில், கிணற்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 9 சடலங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தில் மர்மம் நீடிக்கும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தெலுங்கானாவில் வாரங்கல் மாவட்டம் கீசுகுண்டா மண்டலம் (Geesugonda Mandal) அருகே கோரிகுண்டாவில் (Gorrekunta) மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் ஆலம் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கோணிப்பை தயாரிக்கும் (Gunny/Jute Bag Manufacturing Unit) தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் மசூத் ஆலம், அவருடைய மனைவி நிஷா, மகள் புஷாரா கதூன், மூன்று வயது பேரக்குழந்தை ஷகீல் ஆகிய 4 பேர் சடலமாக கிணற்றில் மிதந்துள்ளனர்.

ALSO READ  பெங்களூரு போலீஸ் கமிஷனராக பண்ட் நியமனம்; தலைவணங்கிய முன்னாள் ஆணையர் பாஸ்கர் ராவ்… 

மறுநாள் அதே கிணற்றில் மசூத்தின் மகன்கள் சபாக், சோகைல் பீகாரைச் சேர்ந்த ஷியாம், ஸ்ரீராம், திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அஹமத் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 9 பேரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லாத நிலையில் தற்கொலையா, கொலையா, எத்தகைய சூழலில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதில் மர்மம் நீடிக்கிறது.

சம்பவ இடத்திற்கு வாரங்கல் போலீஸ் ஆணையர்  V.ரவீந்தர் மாவட்ட ஆட்சியர் ஹரிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் மற்றும் நகர மேயர் பிரகாஷ் ராவ்-ம் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

ALSO READ  தெலுங்கானாவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காட்டுப்பன்றிகளுக்கு உயிருடன் இரையான குழந்தை...
courtesy.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புகைப்படக்கலையில் அதிக ஈடுபாடு காரணமாக கேமரா வடிவத்தில் வீடு கட்டிய புகைப்படக் கலைஞர்… 

naveen santhakumar

ஓடிப்போன சம்மந்திகள் சோகத்தோடு ரிட்டர்ன்.

naveen santhakumar

பெண்களின் திருமண வயதை உயர்த்தியது ஏன்?… மோடி விளக்கம்!

naveen santhakumar