உலகம்

சுத்தம் செய்யப்படாத ஏ.சி: புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்- ஆராய்ச்சி முடிவுகள் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அபுதாபி :-

ஐக்கிய அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Air Conditioner and Health: Is My Air Conditioning Killing Me? | Time

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் மோசமான உட்புறக் காற்றினால் கடுமையான உடல்நல பாதிப்புகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்த யூகோவ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் தற்போது கடும் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்களுக்குள் ஏ.சி.எந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த எந்திரங்களை முறையாக பராமரித்து, குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சுத்தம் செய்வது நலம்.

Air Conditioning Installation Melbourne, AC Installation Services

ஏனெனில், இதுபோன்று அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களை சரியாக தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றது. இதனை அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் டிக்கிங் டைம் பாம் என எச்சரிக்கிறார்கள். சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ALSO READ  லெபனானை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பயங்கர தீ விபத்து… 

மோசமாக பராமரிக்கப்படும் ஏ.சி எந்திரங்களால் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

அமீரகத்தை பொறுத்தவரையில் வீடுகள், அலுவலகங்களில் 90 சதவீதம் உள்ளே உள்ள அறைகளிலேயே இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே வெளியில் உள்ள காற்றை விட உள்ளே உள்ள காற்றானது 5 மடங்கு அதிகமாக மாசுபடுகிறது.

ALSO READ  டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் !

அலுவலகம், வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, சிகரெட் புகை, பாக்டீரியா, சுத்தப்படுத்தும் திரவங்களின் படிமங்கள், பிரிண்டர் எந்திரத்தில் இருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகன புகை போன்றவைகள் கலப்பது அதிகரிக்கும் என தனியார் மருத்துவமனையின் டாக்டர் ஜானி ஆவூக்காரன் எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் வசிக்கும் பொதுமக்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 13 சதவீதம் பேர் மட்டுமே இது குறித்த விழிப்புணர்வை கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே ஏ.சி. எந்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்து தரமான காற்றை சுவாசிக்க பராமரித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காற்று மாசு அதிகரிப்பதால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

News Editor

ஜூம் (Zoom) வீடியோ காலில் பிரேசில் அதிபர் முன்பு நிர்வாணமாக தோன்றிய நபர்.. 

naveen santhakumar

‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கு, இப்போ உங்களுக்கும்’… போலீசார் மீது வேண்டுமென்றேவஇருமிய இளைஞர்….

naveen santhakumar