உலகம் சினிமா

பழம்பெரும் நிறுவனத்தை 61 ஆயிரம் கோடிக்கு வாங்கிய அமேசான் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புகழ்பெற்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்-மை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

உலக அளவில் திரைப்பட துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய வர்த்தகமாக ஹாலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்மை 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமேசான் வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 61,434 கோடிகளாகும்.

மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்கிற எம்ஜிஎம் நிறுவனம் பல முக்கியமான ஹாலிவுட் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1924-ல் தொடங்கப்பட்டது.

முதல் வருடம் இந்நிறுவனம் தயாரித்த, விநியோகித்த படங்களின் எண்ணிக்கை 29. அன்றிலிருந்து இன்று வரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜிஎம் விளங்கி வருகிறது. இதில் உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பல திரைப்படங்களும் அடக்கம். முக்கியமாக ராக்கி, ஜேம்ஸ் பாண்ட் படங்கள்.

மொத்தம் 4000 படங்களையும் 17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது.இந்த எண்ணிக்கை தான் அமேசான் நிறுவனம் எம்ஜிஎம்-மை வாங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அப்படங்களின் மூலம் 180 ஆஸ்கர், 100 எம்மி விருதுகளை வென்றுள்ளது. எம்ஜிஎம் குழுவுடன் இணைந்து அதன் படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளோம். தரமான படங்களை வழங்க நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி மைக் ஹாப்கின்ஸ்.

ALSO READ  இளைஞரின் நேர்மைக்கு அமேசான் கொடுத்த பரிசு:

பிரபல ஹாலிவுட் படங்களை இனிமேல் அமேசான் ஓடிடி தளத்தில் பார்க்க வாய்ப்பு உருவாகியுள்ளதால் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும், ஓடிடி தளங்கள் உலகில் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதன் ஒரு எடுத்துக்காட்டு. ஓடிடி தளங்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நெட்பிளிக்ஸுக்கு கடும் சவாலை அமேசான் பிரைம் வீடியோ இதன் மூலம் ஏற்படுத்தியுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உங்களுக்கு மன சோர்வு இருக்கா? இத படிங்க

Admin

லாஸ்லியாவிற்கு ஆறுதல் கூறிய வனிதா:

naveen santhakumar

மூன்றாவது அலை துவக்கம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை …!

naveen santhakumar