உலகம்

தடுப்பூசி போடாதவர்களுக்கு – மீண்டும் முழு ஊரடங்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரியா நாட்டில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Austria Set To Place Unvaccinated Under Lockdown

ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் சில இடங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரியாவில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை அடுத்த கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ஆஸ்திரியா அரசு அறிவித்துள்ளது.

ALSO READ  இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

அதன்படி, தடுப்பூசி போடாதவர்கள், வீட்டில் இருந்து அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு மட்டும் செல்ல அனுமதி உள்ளது.

தடுப்பூசி போடாதவர்கள், இவற்றை தவிர மற்ற இடங்களுக்கு சென்றால், அதற்கேற்ப அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மக்கள் அனைவரும் தடுப்பூசி சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றுக்கும் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரியாவில், 65 சதவீத மக்களே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு போரை தடுத்து நிறுத்திய கொரோனா வைரஸ்…

naveen santhakumar

ஹெலிகாப்டரை வெட்டி எடுக்கப்பட்ட இதயம்….இரண்டு முறை கீழே விழுந்தும் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது…..

naveen santhakumar

பண்டையக்கால பாடலை கண்முன் நிறுத்திய பூங்கா… 

naveen santhakumar