உலகம்

கொரானா வைரஸ் காரணமாக, இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் தேவாலயம் மூடப்பட்டது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெத்லேஹம்:-

கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக, பாலஸ்தீனப் பகுதியில் உள்ள இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லேஹம் தேவாலயம் (Church of The Nativity) மூடப்பட்டது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் 4 பாலஸ்தீனியர்களுக்கு கொரோனா தொற்று (COVID-19) உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து கொரானா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பாலஸ்தீனப் பகுதியிலுள்ள தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை மூடுவதற்கு பாலஸ்தீன அரசு உத்தரவிட்டது.

ALSO READ  ஜெர்மனியில் கத்திக்குத்து-3 பேர் பலி

இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லேஹமிலுள்ள கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான கிறிஸ்து பிறப்பிட தேவாலயத்தையும் மூட தேவாலய நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். பாலஸ்தீன அரசு மீண்டும் அனுமதிக்கும் வரை பிறப்பிட தேவாலயம் மூடப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெருஸலேமில் உள்ள யூதர்களில் புனித ஸ்தலமான மேற்கு சுவருக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

ALSO READ  சர்வதேச Midwife தினம்...

இதேபோல் அதன் அருகில் உள்ள AL-AQSA மசூதிக்கும் கட்டுபாடுகள் எதுவும் விதிக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க களமிறங்கும் MISS ENGLAND…. 

naveen santhakumar

சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீரால் பரவிய கொரோனா….

naveen santhakumar

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவிக்கு கொரோனா தொற்று…..

naveen santhakumar