உலகம்

பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியராக மாறிய ஜஸ்டின் ட்ரூடோ…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒட்டாவா:-

கொரோனா வைரஸால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், வீட்டில் இருத்தபடி பாடம் கற்றுக்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கொரோனா வைரஸால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்:-

ALSO READ  மக்களுக்கு இலவச ரயில் பயணம்!

அதில், பெற்றோர்கள் அனைவர்க்கும் வணக்கம் என்றும் உங்கள் குழந்தைகள் வீட்டுப்பாடம் தொடர்பான கேள்விகளில் குழந்தைகள் சிக்கிக்கொண்டால்.? அந்த செய்தியை எனக்கு அனுப்புங்கள், ஏனென்றால் நான் ஒரு ஆசிரியராக உதவ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ  இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

இதையயடுத்து இந்த ட்வீட்டுக்கு பதிலளிப்பதன் மூலமோ அல்லது #CanadaHomeworkHelp என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துவதன் மூலமோ கடினமான கேள்வி என்ன என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

கனடாவுக்கு பிரதமராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், ஜஸ்டின் ட்ரூடோ பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். இதில் ஆசிரியர் பணியும் ஒன்று.

மேலும் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு சிறந்த குத்துச்சண்டையில் வீரரும் கூட.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் இடையே தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் வெற்றி… 

naveen santhakumar

யானைகளை வேட்டையாட அரசு அனுமதி அதிர்ச்சி தகவல்!

Admin

இரும்பிலே ஒரு இருதயம் : ராணுவ வீரரின் வித்தியாசமான லவ் ப்ரபோஸல்

naveen santhakumar