உலகம்

விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு: ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ:

சினிமா படப்பிடிப்பு இயற்கையான சூழலில் நடைபெற்று வந்தது, காலப்போக்கில் விஞ்ஞான வளர்ச்சியால் ஸ்டுடியோக்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டுடியோக்களில் சினிமா படப்பிடிப்புக்கான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

Peresild, Shkaplerov and Shipenko.
Actor Yulia Peresild, cosmonaut Anton Shkaplerov and film director Klim Shipenko

அதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் சென்று சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டது. குறிப்பாக பாடல் காட்சிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள ரம்யமான சூழல்களில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ரஷ்ய நாட்டின் விஞ்ஞானிகள் விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு நடத்த உள்ளனர். சர்வதேச திரைத்துறையில் முதல்முறையாக விண்வெளி மையத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் சினிமா படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

Tom Cruise has plans to film in space; Russian actor Yulia Peresild is already doing so on the ISS.

இதற்காக அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு நடிகையுடன் செல்கின்றனர். ரஷ்ய மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ், நடிகை யூலியா பெரெசில்ட் (வயது 37), திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ (வயது 38) ஆகியோர் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணிக்கின்றனர்.

ALSO READ  இலங்கையின் சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா :

இவர்களில் பெரெசில்ட், ஷிபென்கோ ஆகியோர் ‘தி சேலஞ்ச்’ (சவால்) என்ற திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இங்கு நடத்துகின்றனர்.

Russian film crew in orbit to make first movie in space

விண்வெளி பயணிகள் 3 பேரும், கஜகஸ்தானில் உள்ள பைகானூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்.எஸ்-19 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறக்கின்றனர். இவர்கள் 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பார்கள். பணிகள் முடிந்த பின்பு வரும் 17ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  11,500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழக்கூடிய அரிய நிகழ்வு.. 

விண்வெளி வீரர் ஓலெக் நோவிட்ஸ்கி கடந்த 6 மாதங்களாக விண்வெளி மையத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். இதன் நேரடி ஒளிபரப்பானது நாசா டி.வி சேனல் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

ரஷ்யாவின் இந்த புதிய முயற்சியை ஹாலிவுட் உள்ளிட்ட சர்வதேச சினிமா துறையினர் ஆச்சரியத்துடன் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளவரசர் இளவரசி பட்டங்களை அதிகாரபூர்வமாக துறந்த ஹாரி மேகன் தம்பதி – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

Admin

லாட்டரியில் கிடைத்த 700 கோடி… ஜெர்மானியருக்கு நேர்ந்த சிக்கல்

Admin

பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை…..

naveen santhakumar