வாஷிங்டன்:
உலகமெங்கும் கொரோனா தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இன்னும் பல லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
பல நாடுகள் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்தியாவிலேயு கோவிஷீல்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
அதுபோன்று அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் நன்றாக வேலை செய்கிறது என்பது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பைசர் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்ட பின்னரும் டெல்டா வைரஸ் உள்பட அனைத்து உருமாறிய வைரஸ்கள் பாதித்தாலும்கூட மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிற நிலை பெருமளவு குறைந்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் 90 சதவீத செயல்திறனை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பைசர் நிறுவனத்தின் ஆய்வாளரான சாரா டர்டாப் பின்கண்டவாறு தெரிவித்துள்ளார். எங்கள் ஆய்வானது கடுமையான நோய்களையும், பெருந்தொற்றுகளையும், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்ப்பதையும் தடுப்பதில் மற்றும் டெல்டா வைரஸ் நோயை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் முக்கிய கருவிகளாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.