உலகம்

மீண்டும் சீனாவில் தலைதூக்கிய கொரோனா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங் :

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019- ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 21 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ  கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகை சுனைனா !

இது தவிர 25 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,359 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவை கண்டறிய களமிறங்கும் மோப்ப நாய்கள்….

naveen santhakumar

ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை IIT முதல் 50-வது இடத்தை பெற்றுள்ளது :

naveen santhakumar

இலங்கையில் தமிழர்கள் எழுச்சி போராட்டம்:

naveen santhakumar