உலகம்

இலங்கையில் தமிழர்கள் எழுச்சி போராட்டம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொழும்பு:

இலங்கையின் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கை தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களை புத்தமயமாக்குதல் ஆகியவற்றை கைவிட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போன தமிழர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.முஸ்லிம் மக்களின் உடல் அடக்கம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு. மலையக மக்களின் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை இலங்கை தமிழர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

ஆனால் இவற்றை இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், சமய தலைவர்கள், காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், முஸ்லிம் அமைப்புகள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

இதையடுத்து இலங்கையின் கிழக்கு மாகாண பொத்துவில் என்ற இடத்தில் இருந்து பொலிகண்டி வரை இந்த அகிம்சை எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டது. தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

ALSO READ  இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது!

இறுதி நாளான இன்று கிளிநொச்சியில் போராட்டம் தொடங்கியது.யாழ்ப்பாணத்தை நோக்கி சென்ற இந்த பேரணியில் ஏராளமானோர் இணைந்தனர். போராட்டத்தை ஒடுக்க நீதிமன்ற உத்தரவு, போலீஸ் ஆகியவற்றை அரசு பயன்படுத்தி தடுக்க முயன்றது என்றாலும் பேரணியும், போராட்டமும் வெற்றிகரமாக நடந்தது.

ALSO READ  டெல்லி ஜாமியாவில் நடந்த துப்பாக்கி சூடு- அமித் ஷா கடும் கண்டனம்

போராட்டம் நடைபெற்ற பகுதியில் தமிழர்கள் வாகனங்களை தடுக்க சிங்களர்கள் ஆணிகளை வீசினார்கள். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காணும் வகையில் வீடியோ எடுத்தனர்.இருப்பினும் அமைதியான முறையில் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி நிறைவு செய்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

News Editor

பிடனின் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்தியருக்கு பதவி :

naveen santhakumar

பில்கேட்ஸ்-க்காக 4600 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட சொகுசு கப்பல்.

naveen santhakumar