உலகம்

துபாயில் கொரோனாவால் தொழில் முடக்கம்… நாடு திரும்ப எண்ணிய இளைஞர்கள்… கோடீஸ்வரராக மாறிய அதிசயம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 துபாய்:-

துபாயில்  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் சொந்த ஊர் திரும்ப எண்ணிய கேரளாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் திடீரென கோடீஸ்வரரான சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஜிஜேஷ் கொரோதா (Jijesh Corotha), ஷாஜஹான் குட்டிகட்டில் (Shah Jahan Kuttikattil), ஷனோஜ் பாலக்ரிஷ்ணன் (Shanoj Balakrishnan) ஆகிய மூன்று பேரும் துபாயில் சொகுசு கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கருணா பரவல் காரணமாக துபாயில் சுற்றுலா தொழில் முழுவதுமாக முடங்கியுள்ளது இதனால் இவர்கள் 3 பேருக்கும் வருமானம் சுத்தமாக நின்று போனது இதையடுத்து வாங்கிய கடனுக்கு கூட வண்டி கட்ட இயலாமல் தவித்து வந்தனர். இதை எடுத்து காரை விற்றுவிட்டு கடனை அடைத்து மூவரும் ஊருக்குத் திரும்பலாம் என்று முடிவு. இதற்காக ஒருவரைப் பார்த்து காரை விற்பதற்கான ஏற்பாடுகளையும்.

இந்நிலையில் இவர்களுக்கு வந்த ஒரு போன் அழைப்பு மூலம் இவர்களின் மொத்த வாழ்க்கையே மாறிப் போயுள்ளது. இவர்கள் மூன்று பேரும் இணைந்து சில தினங்களுக்கு முன்னர் லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கி உள்ளனர் இவர்களுக்கு 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. மூன்று பேரும் இணைந்து லாட்டரியை வாங்கியதால் பரிசுத்தொகையை மூவருமாக பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர்.

ALSO READ  COVID-19 e-Pass என்றால் என்ன???அதை பெறுவது எப்படி??...

இதுகுறித்து நண்பர்களில் ஒருவர் கூறுகையில் வாங்கிய கடனுக்கான தொகையை கூட கட்ட முடியாமல் தவித்து வந்த நிலையில் காரை விட்டுவிட்டு ஊருக்கே செல்லலாம் என முடிவு செய்து இருந்தோம் இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிரம்பின் தனி வழக்கறிஞருக்கு கொரோனா :

naveen santhakumar

கொரோனா குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய நாவல்.

naveen santhakumar

பாகிஸ்தானின் முன்னாள் அதிபருக்கு உடல்நலக்குறைவு :

Shobika