உலகம்

மக்களை பழிவாங்க தன் நாக்கால் பொருட்களை நக்கிய பெண்மணி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 கலிபோர்னியா:-

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் $ 1800 டாலர் மதிப்பிலான பொருட்களை நாக்கால் நக்கி சேதப்படுத்திய குற்றத்திற்காக பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கலிபோனியா-நெவாடா மாகாணங்களில் எல்லையில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறிய காவல் துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ் ஃபியோர் (Chris Fiore) :-

சம்பவ இடத்திற்கு நாங்கள் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பெண்மணியை கைது செய்தோம். அந்த பெண்மணியின் பெயர் ஜெனிபர் வாக்கர் (53) (Jennifer Walker).

ALSO READ  இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு !

நாங்கள் கைது செய்தபோது மாமிசம் மற்றும் மது வேறு சில பொருட்களையும் தனது கூடையில் வைத்திருந்தார். முதலில் அவர் சில நகைகளை தனது நாக்கால் நக்கிய பிறகுதான் மற்ற பொருட்களையும் நக்கியுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வேண்டுமென்றே இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து கொடூர காழ்ப்புணர்ச்சி (Felony Vandalise) காரணமாக இந்த செயலை செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

ALSO READ  இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் பரபரப்பு....

மேலும் அவர் சேதப்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அழிக்க சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியில் அமெரிக்கர்கள் உள்ள நிலையில் இந்தப் பெண்மணியின் செயலால், மேலும் கலக்கமடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவல்-இருதரப்பினரிடையே மோதல்

naveen santhakumar

40 வினாடிகளில் வைரஸை கொல்லும் அறை…

naveen santhakumar

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி : ஜி20 உச்சி மாநாடு ஒப்புதல்

News Editor