உலகம்

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி கிடையாது- சவுதி அரேபியா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியாத் (Riyadh):-

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மெக்காவிற்கு ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்றும் சவுதி அரேபியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

நவீன சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக வெளியில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசு கூறியுள்ளது. 

ALSO READ  மோட்டார் சைக்கிளில் வந்து குழந்தையை தரதரவென இழுத்துச் செல்லும் குரங்கு-வைரலாகும் வீடியோ...

கடந்த ஆண்டு 2.5 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்ஃப் நாடுகளில் சவுதி அரேபியாவில் இதுவரையில் 1,60,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா… 

naveen santhakumar

தாய்லாந்தில் அறிமுகமாகும் ஹோண்டா சிட்டி கார்

Admin

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான் அரசு:

naveen santhakumar