உலகம்

சீனா- இந்தியா ஒற்றுமைக்கு பாலமாக விளங்கும் துவாரகநாத்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனா:

சீனாவின் ஹூபே மாகாணத்தில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் துவாரகநாத் சாந்தாராம் கோட்நிஸ்ஸின் சிலை உள்ளது. சீன அரசால் அதிகம் மதிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர் இவர் ஆவார்.

சீனா-ஜப்பான் போரின்போது 1938-ஆம் ஆண்டு இவரது மருத்துவ பங்களிப்பே இதற்கு முக்கிய காரணம். 1938 முதல் 1942 வரை சீன-ஜப்பானிய போர் உச்சத்தில் இருந்தது. அப்போது சீனாவின் நட்பு நாடாக திகழ்ந்த  இந்தியாவின் சார்பாக ஐந்து மருத்துவர்கள் கொண்ட ஓர் குழு சீனாவுக்கு உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒருவர்தான் துவாரகநாத். பயிற்சி பெற்ற சிறந்த இந்திய மருத்துவர்களில் ஒருவரான அவர் சீன ராணுவ படைக்கு உதவிகள் செய்தார்.

ALSO READ  பார்சலில் வந்த ஒமைரான்… மக்கள் அதிர்ச்சி!

இதனால் சீனாவுக்கு அவர்மீது என்றும் தனி மரியாதை உண்டு. தற்போது லடாக் எல்லை பிரச்சனை காரணமாக சீனா-இந்தியா ஆகிய நாடுகள் கடுமையாக போர் புரிந்துவரும் நிலையில் சீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் துவாரகநாத் பிறந்தநாள் வந்தபோது சீன மற்றும் இந்திய மருத்துவ மாணவர்கள் ஓர் ஆன்லைன் விழாவில் கலந்துகொண்டனர்.

இதில் துவாரகநாத் பங்களிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சமீபத்திய லடாக் எல்லை பிரச்சனை குறித்த ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதுபோன்ற வேறுபாடுகளை களைந்து இந்தியாவும் சீனாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சீன-இந்திய நல்லுறவை விரும்பும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ALSO READ  இனி முக கவசம் தேவையில்லை - இஸ்ரேல் அறிவிப்பு…!

சீன-இந்திய வேற்றுமை அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் துவாரகநாத் இரு நாடுகளுக்கும் ஓர் இணைக்கும் பாலமாக இன்றும் திகழ்ந்து வருகிறார் என்றே தான் சொல்ல வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ.1.5 கோடி மதிப்பு கொண்ட பாம்பு விஷம் பறிமுதல்

Admin

கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்..!

News Editor

சத்தீஷ்கரில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்..

Shanthi