உலகம்

ஒரு வேளை தேர்தலில் பிடன் ஜெயித்தால்!!!!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்: 

நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை, ஒரு வேளை ஜோ பிடன் தோற்கடித்தால், அவர் பல்வேறு புதிய சவாலை எதிர்கொள்வார்.

ஏனெனில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான நெருக்கடியை அமெரிக்கா சந்தித்துள்ளது. கொரோனாவாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவை வழிநடத்த ஒரு புதிய நிர்வாகத்தை உருவாக்குவது நிச்சயம் பிடனுக்கு சவாலாக இருக்கும்.

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின் மையக் கருப்பொருளாக பேசி வருகிறார்.எனவே பிடன் அதிபரானால் பொது சுகாதார பேரழிவை சிறப்பாகக் கையாள முடியும் என்பதை காட்ட வேண்டும். அமெரிக்க அரசின் நிர்வாக முடிவுகளில் டிரம்ப் செய்த சேதங்களையும், பொதுமக்களுக்கு டிரம்ப் அரசின் முடிவுகளை சீர்திருத்த வேண்டியது வரும்.

ALSO READ  ஒரு போரை தடுத்து நிறுத்திய கொரோனா வைரஸ்...

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ளதால், பிடனுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் ட்ரம்பின் பலவீனங்கள், அவருடைய தவறுகளை அதிகம் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதேபோல் தேர்தலுக்கு பின் என்ன செய்ய போகிறார்?????. எப்படி சேதங்களை சரிசெய்ய போகிறார்???? என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ALSO READ  பெண் செய்தியாளர் பரிதாபமாக சுட்டுக்கொலை:

ஜனநாயக தேசியக் குழுவின் நிதித் தலைவரான கிறிஸ் கோர்ஜ், தேர்தலுக்கு பிந்தைய மாற்றம் குறித்து கூறும் போது, இது நவீன அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான, மிகவும் கடினமான மற்றும் மிகவும் காஸ்ட்லியான மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் “என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : விளையாட்டு வீரர்கள் மத்தியில் கவலை

naveen santhakumar

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி : இறுதி போட்டியில் இந்திய அணி நேபாள அணியுடன் மோதல்

News Editor

அதிபர் ஜெயிர் போல்சொனரோ மருத்துவமனையில் அனுமதி :

Shobika