உலகம்

பெண்கல்வி உரிமைக்கு குரல் கொடுத்த இளம் போராளி….’சர்வதேச மலாலா தினம்'(ஜூலை-12) :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். 2012 ஆம் ஆண்டு, பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார் மலாலா. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அவர், பயந்து ஒதுங்கிவிடாமல் தனது கருத்துக்களை முன்பைவிட வலுவாக முன்வைத்தார்.

Malala Yousafzai | Financial Times

2013-ம் ஆண்டு மலாலா தனது 16ஆவது பிறந்தநாளான ஜூலை 12-ல் ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் சபை “மலாலா தினம்” என்று குறிப்பிட்டது.பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் மலாலாவுக்கு, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார்.

Malala Yousafzai on student life, facing critics – and her political  ambitions | Books | The Guardian

பெண்களின் உரிமை மட்டுமல்லாமல் சர்வதேச அமைதிக்காகவும் குரல் கொடுத்து வருகிறார் மலாலா. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உண்மையான எதிரி வறுமை, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை என்று சுட்டிக்காட்டிய மலாலா, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடாமல், கைகோர்த்து அதற்கு எதிராகப் போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இந்தியாவிலும்,பாகிஸ்தானிலும் உள்ள மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் தனது கனவு என்றும் குறிப்பிடுகிறார் மலாலா.


Share
ALSO READ  "மானத்த விட லேப் பெருசு"; பன்றியிடம் இருந்து தனது லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய தாத்தா..! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கச்சா எண்ணெயையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

naveen santhakumar

பிரான்ஸில் இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்கள் முடக்கம்- காரணம் என்ன ?

naveen santhakumar

பூமிக்கு ஆபத்தை விளைவிக்குமா ராட்சச கல்…??????

Shobika