உலகம்

கொரோனா ஊரடங்கு: தனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் மக்கள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெருசேலம்:-

கொரோனாவின் காரணமாக ஏற்பட்டுள்ள தனிமையை போக்க இஸ்ரேலியர்கள் மரங்களை கட்டித் தழுவிக் கொள்கின்றனர்.

உலக நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் பல்வேறு நாடுகளில் மக்கள் தனிமையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து தனிமையால் வாடும் அந்நாட்டு மக்களிடம், மரங்களிடம் அன்பு செலுத்துமாறு அப்போலோனியா தேசிய பூங்கா (APOLLONIA NATIONAL PARK) ஊழியர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். அதன் விளைவால் அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர். ‘கொரோனா பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கட்டியைணைக்க முடியவில்லை. மரங்களை கட்டியணைப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ இவ்வாறு அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பூங்கா டெல் அவிவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மரங்களை நேசியுங்கள் மரங்களை கட்டிப் பிடியுங்கள் என்று அந்நாட்டின் இயற்கை மற்றும் பூங்கா அமைப்பு (Nature and Park Authority) மக்களிடையே வலியுறுத்தி வருகிறது. சில வயதானவர்கள் இது தொடர்பாக கூறும் பொழுது, தங்களால் தங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளை கட்டி அணைக்க முடியவில்லை. இந்த மரங்களை கட்டி அணைப்பதன் மூலம் தங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுவதாக கூறினார்கள்.

ALSO READ  கொரோனா பரவல்: உலகின் பாதுகாப்பான நாடு எது..??

இதேபோல ஐஸ்லாந்து நாட்டில் மக்கள் தனிமையை போக்க மரங்களை கட்டித்தழுவிய தே ஸ்டாண்டர்டு வனத்துறையை ஊக்குவித்து வருகிறது.

மக்கள் தனிமையை போக்கிக்கொள்ள மரங்களில் கட்டி பிடிப்பது ஒரு வகை சரி என்று வைத்துக் கொண்டாலும், பெரும்பாலான இடங்களில் மக்கள் மரங்களை கட்டி பிடிக்கும் போது சமூக இடைவெளியை மறந்து அனைவரும் நெருக்கமாக இருந்து கொண்டு கட்டி பிடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடரும் மோதல்; செத்து மடியும் பொதுமக்கள் ! 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்கள் சென்ற பேருந்து வெடித்து சிதறல் :

Shobika

யானைகளை வேட்டையாட அரசு அனுமதி அதிர்ச்சி தகவல்!

Admin

அழிவின் விளிம்பில் சிங்கராஜா

News Editor