உலகம்

உலக அன்னையர் தினம்.. அன்னைக்கு செய்யவேண்டியவை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக வரலாற்றில் இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்டுள்ளனர். நமது கலாசாரம் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என அன்னையருக்கு தான் முதலிடம் தந்திருக்கிறது. 

படைத்தவன் தான் கடவுள் எனில், நம்மை படைத்த அன்னையர் தான் கடவுள். அன்னைதான் அனைத்துக்கும் அடிப்படையானவள். அவள் இல்லையெனில், நாம் இந்த மண்ணில் அவதரித்திருக்க முடியாது.

தாயாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும்ஆசானாக என பெண், தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம்வந்தாலும், அன்னை என்றபாத்திரமே உன்னதமானது. உலகில் ஈடு இணையற்றது அன்னை. எனவே அன்னையே முதல் தெய்வம்.

அன்னையர் தினத்தின் வரலாறு :-

பண்டைய கிரீசில், ‘ரியா’ (Rhea)என்ற கடவுளைத் தாயாக வழிபட்டனர்.

ALSO READ  இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடரும் மோதல்; செத்து மடியும் பொதுமக்கள் ! 

ரோமிலும், ‘சிபெல்’ (Cybele) என்ற பெண் கடவுளை, அன்னையாக தொழுதனர்.

நவீன அன்னையர் தினம் அன்னா ஜார்விஸ் (Anna Jarvis) என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது. 

இளம் வயது அன்னா ஜார்விஸ்.

அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. 

இவர் ஆண்டுதோறும்  ஒரு தினத்தை எல்லோரும் தங்களது தாயை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக இவர் அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இவரின் கடுமையான உழைப்பே அன்னையர் தினம் கொண்டாட முக்கிய காரணம்.

பின்னர் 1914 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் விடுத்த அறிவிப்பின்படி ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ALSO READ  நிருபரின் கேள்வியால் கோபமான டிரம்ப்:
Woodrow Wilson.
Proclamation Of Woodrow Wilson.

இந்த நாளில் உங்கள் அன்னை ஆசைபட்ட எதையேனும் கற்றுக் கொடுங்கள்:-

குழந்தைகளுக்குத் அம்மா தான் முதலில் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பார். சற்று சிந்தித்து பாருங்கள் உங்கள் அம்மாவிற்கும் சில விஷயங்களை கற்றுக் கொள்ள ஆசை இருந்திருக்கும். 

அது ஆங்கிலத்தில் பேசுவதாக இருக்கலாம் அல்லது ஸ்கூட்டி, காரை ஓட்டுவதாக இருக்கலாம், கணினியை கற்றுக் கொள்ள ஆசையாக இருந்திருக்கலாம்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் பயன்பாட்டை அறிந்து கொள்ள ஆசைப்படலாம்.

ஆன்லைனில் கரண்ட் மில், தொலைபேசி மில் கட்டுவது இது போன்று அவர்கள் ஆசைப்படும் விஷயங்களை அறிந்து அதற்கேற்ப உங்க அம்மாவிற்கு கற்றுக் கொடுங்கள். இந்த விஷயங்களை அவர் செய்த பிறகு அவர் முகத்தில் தோன்றும் பெருமிதம் விலைமதிப்பற்றது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கைலாசா நாட்டின் மீது “பயோ வார்”- நித்யானந்தா குற்றச்சாட்டு

Shobika

பிரித்தானிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இந்தியர்

Admin

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நடந்த சுவாரசியமான விஷயம்

News Editor