உலகம்

சென்றதோ தேனிலவு…..சேர்ந்ததோ கல்லறையில்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வடகரோலினா :

வடகரோலினாவை சேர்ந்த பிரபல கார் பந்தய நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த வில்லியம் ரவுடி ஹாரல்(30)(William Rowdy Harrel) என்பவருக்கும்,ப்ளாக்லே(23)(Blakley) என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இத்தம்பதிகள் “Florida Keys” என்ற தீவிற்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர். 

இந்நிலையில் இருவரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிரக் காரின் மீது வேகமாக மோதியுள்ளது.இந்த விபத்தில் தம்பதிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய 62 வயதுள்ள டிரக் ஓட்டுநர், அதில் பயணித்த 58 வயதான நபர் மற்றும் 61 வயதுடைய பெண்கள் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ALSO READ  முகக்கவசம் அணிய மறுத்த பிரேசில் அதிபருக்கு கொரோனா… 

மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதிகள் பலியாகியுள்ள சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

படப்பிடிப்பில் பயங்கரம் – நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு, இயக்குனர் படுகாயம் ..!

naveen santhakumar

ராஜ்ஜியத்தைவிட்டுப் பிரியும் இளவரசர் ஹாரி

Admin

மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்கால தடை:

naveen santhakumar