உலகம்

“தீயணைப்பு வீரராக மாறுவேடமிட்டு தீக்குளித்த நாடு, பாகிஸ்தான் ” -இந்தியா பதிலடி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், “தீயணைப்பு வீரராக மாறுவேடமிட்டு தீக்குளித்த நாடு, பாகிஸ்தான் ” என பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.பொதுச்சபை 76 வது  கூட்டத்தில்  உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே, இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில், காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்தார்.

அவரது உரையில் “வெளியில், தீயணைப்பு வீரர் போல் காட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் உண்மையில் தீக்குளித்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பார்கள் என்ற நம்பிக்கையில், பாகிஸ்தான் அவர்களின் கொல்லைப்புறத்தில் பயங்கரவாதிகளை வளர்க்கிறது. எங்கள் நாடு மட்டுமின்றி, உண்மையில் முழு உலகமும் அவர்களின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  30 ஆண்டுகளில் இல்லாத கடும் வெள்ளம்- தண்ணீரில் தத்தளிக்கும் சீனா… புகைப்படங்கள் உள்ளே... 

மறுபுறம், அவர்கள் தங்கள் நாட்டில் மதவெறி வன்முறையை பயங்கரவாத செயலாக மறைக்க முயல்கின்றனர். எங்கள் நாட்டுக்கு எதிராக ஐநா போன்றவற்றை பயன்படுத்தி பொய்யான தீங்கிழைக்கும் பரப்புரைகளை பாகிஸ்தான் தலைவர்கள் பரப்புவது இது முதல்முறை அல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா இருக்கா..? இல்லையா..? முகத்தை பார்த்து சொல்லும் ஸ்மார்ட் செல்போன்!!

naveen santhakumar

இந்த நாட்ல மட்டும் கொரோனோ இல்லையாம்..எந்த நாடு தெரியுமா?

naveen santhakumar

ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ்: துப்பாக்கியால் மிரட்டிய இளம்பெண்

Admin