உலகம்

இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடு தளர்வு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:

இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு பயணக் கட்டுப்பாட்டில் ஒரு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இனி 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள், இங்கிலாந்து நாட்டுக்குச் செல்கிறபோது அவர்கள் 10 நாட்கள் ஓட்டலில் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இது ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 4 மணிக்கு அமலுக்கு வருகிறது.

UK relaxes Covid travel curbs for India, institutional quarantine exempted  || இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடு தளர்வு

இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து மந்திரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,”ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு நிற பட்டியலில் இருந்து பொன்னிற பட்டியலுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் 8-ம் தேதி காலை 4 மணிக்கு அமலுக்கு வருகிறது. நாம் எச்சரிக்கையான அணுகுமுறையை தொடர்கிறபோது, மக்கள் உலகளவில் தங்கள் குடும்பங்களோடும், நண்பர்களோடும், தொழிலுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிற வகையில், மேலும் பல இடங்களைத் திறந்து விடுவது சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது. நமது வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்துக்கு நன்றி என கூறியுள்ளார்.

ALSO READ  கோப்பை யாருக்கு: 3வது டி20யில் இன்று இந்தியா- மே.தீ. மோதல்
இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடு தளர்வு

இங்கிலாந்து நாட்டின் பொன்னிற பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 நாடுகளுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இங்கிலாந்து சென்றபின் 2 கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்வதற்கு முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ள வேண்டும், பயணி இருப்பிடம் அறியும் லொகேட்டர் படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

20 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை..13 வாரங்களில் உயிரிழந்த அவலம்.. பதற வைக்கும் காரணம்

Admin

காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம் !

News Editor

பிடித்த பாடல்களை கேட்டபடியே உயிர்விட்ட கொரோனா பாதித்த பெண்.. மகள் கதறல்…

naveen santhakumar