உலகம்

கிம் ஜாங் உன் இறந்தார் என்ற செய்திகள் பரவ காரணங்கள் என்ன???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா அளவிற்கு பேசப்பட்ட மற்றொரு பரபரப்பான விஷயம் என்னவென்றால் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றியதுதான். கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமடைந்தாகவும் அவர் இறந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் திடீரென கடந்த மே ஒன்றாம் தேதி ஆலை திறப்பு விழா ஒன்றில் தோன்றினார் கிம் ஜோங் உன்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கடைசியாக  பொலிட்பீரோ கூட்டத்தில் கலந்துகொண்ட கிம் அதன் பிறகு மக்கள் மத்தியில் தோன்றவே இல்லை. இதையடுத்துக் கிம்-க்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அதனால் அவரது உடல் நிலை மோசமடைந்து, அவர் இறந்து விட்டார் என்று பல செய்திகள் உலா வரத் தொடங்கியது.

இந்நிலையில் திடீரென மே தினத்தையொட்டி  புதிதாக உர ஆலை ஒன்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கிம்.

உலகத்திற்கு பரபரப்பையும் பதட்டத்தையும் அடிக்கடி அளித்து வருபவர் கிம் ஜாங் உன். இவர் இவ்வாறு காணாமல் போவது முதன் முறை அல்ல. ஏற்கனவே 2014ம் ஆண்டு 40 நாட்கள் தி மாயமானார். ரீ தொடங்கி அரசியல் காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று வதந்தி பரவியது திடீரென்று ஒரு நாள் மக்கள் மத்தியில் கைத்தடியோடு தோன்றினார்  கிம் ஜோங் உன்.

மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட காரணத்தால் 40 நாட்கள் ஓய்வில் இருந்ததாக தென்கொரியா அப்பொழுது தெரிவித்தது.

ALSO READ  "2025 வரை கம்மியா சாப்பிடுங்க மக்களே!" - அதிபரின் கொடுமையான அட்வைஸ்!

கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று செய்திகள் பரவ காரணங்கள் என்ன.?? 

முதல் காரணம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கிம் ஜாங் உன் தாத்தாவும் வடகொரியாவை எழுதியவருமான கிம் இல் சுங் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது வடகொரியாவின் மிக முக்கியமான கொண்டாட்டம் இதுவாகும். இந்த விழா வடகொரியாவில் சூரிய விழாவாக (Sun Event) கொண்டாடப்படும். 

இந்த விழாவில் கலந்துகொள்ளாத பொதுமக்களுக்கு தண்டனை அளிக்கப்படும் இந்நிலையில்தான் கிம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தது அனைவருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. ஏனெனில் கிம் இந்த விழாவில் இதுநாள் வரையில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.

இரண்டாவது காரணம் தென் கொரியாவைச் சேர்ந்த Daily NK  வெளியிட்ட செய்திகள். இந்த நிறுவனம்தான் கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று செய்தி வெளியிட்டது. நிறுவனம் அமெரிக்காவின் நிதி உதவி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இதை ஆதாரமாக வைத்தே மற்ற செய்தி நிறுவனங்களும் உடல்நிலை குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது.

ALSO READ  ஆறு வகை கொரோனா வைரஸ்: லண்டன் கிங்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு... 

மூன்றாவது காரணம் வடகொரியாவின் பல்வேறு முக்கியமான கோப்புகளில் கிம் ஜாங் உன் பல வாரங்களுக்கு கையெழுத்திடாமல் இருந்தது. இந்நிகழ்வு தான் அனைவருக்கும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

நான்காவதாக அமெரிக்காவைச் சேர்ந்த வடகொரியாவை கண்காணித்து வரும் Project 38 North என்ற அமைப்பு வெளியிட்ட சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் இவை சந்தேகத்தை மேலும் கிளப்பியது ஏனெனில் எனக்கு சொந்தமானது என்று நம்பப்படும் ரயில் ஒன்று பல நாட்களாக வான்சன் (Wonsan) அருகில் உள்ள ரயில் நிலையத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்று  செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது.

மேற்கண்ட காரணங்களால் தான் கிம் ஜாங் உன்  உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் உலா வரத் தொடங்கியது.

The Secret Office 39  இதுதான் வடகொரிய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் இந்த அலுவலகம்தான் வடகொரிய தலைவர்கள் குறித்த பல்வேறு விஷயங்களை வெளிஉலகிற்கு கைவிடுவதாக நம்பப்படுகிறது இந்த அலுவலகம் வெளியிடும் தகவல்கள் தென் கொரியா மற்றும் ஜப்பான் வழியாக உலக நாடுகளுக்கு தெரிய வருகிறது என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த அலுவலகம் தலைவர்கள் குறித்து வெளியிடும் பெரும்பாலான தகவல்கள் பகுதியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்து சோதனை இன்று தொடக்கம்….

naveen santhakumar

சிறை ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதியா?

Admin

இந்தியாவுடனான மோதலில் இறந்த சீன வீரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டால் அரசுக்கு ஆபத்து… 

naveen santhakumar