உலகம் தமிழகம்

ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் என முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு பேசிய போது, ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது. மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் எனவும் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதாகவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகம் பெறும் நாடு இந்தியா தான். இந்தியாவில் தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னிலையில் விளங்குகிறது எனவும் உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய அழைக்கிறோம் எனவும் கூறினார்.


Share
ALSO READ  3 ஆண்டுகளுக்கு மேல் ரேஷன் கடையில் பணிபுரிய முடியாது - கூட்டுறவு துறை எச்சரிக்கை!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார் :

Shobika

சசிகலாவுடன் தீடீர் சந்திப்பு; விளக்கமளித்த சரத்குமார்..!

News Editor

செப். 13 முதல் 21-ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

News Editor