உலகம்

அண்டார்டிகாவில் எங்கும் ரத்த பனி-இந்த விசித்திர நிகழ்வுக்கான காரணம் என்ன.???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அண்டார்டிக்காவில் உக்ரைன் நாட்டை சேர்ந்த Vernadsky Research Base என்ற ஆய்வு மையம் உள்ளது. இம்மையம் அண்டார்டிக்காவில் வட பகுதியில் Galindez எனும் தீவில் அமைந்துள்ளது.

இந்த ஆய்வு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆய்வு மையத்தை சுற்றி எங்கு ரத்த நிறத்தில் எங்கும் பனி காணப்படுகிறது.

இது குறித்த புகைப்படங்களை உக்ரைன் நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் (Ministry of Education and Science) தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ALSO READ  ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு:

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்:-

இந்த ரத்த பனி படர்வுக்கு காரணம் கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்னும் ஆல்கா (பாசி).

இந்தவகை ஆல்காக்கள் கடும் குளிரான துருவப் பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் காணப்படும். இவை கடும் குளிரையும் தாங்கி வாழும் தன்மை கொண்டவை.

இவற்றின் குளோரோபிளாஸ்ட்களில் கரோட்டினாய்டு என்னும் நிறமி உள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் தான் கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் நிறத்திற்கு காரணமான நிறமி ஆகும்.

ALSO READ  32வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள்; டோக்கியோவில் கோலாகல தொடக்கம்…!

இந்த அல்காக்கள் அதிக சூரிய ஒளி பெறும் பட்சத்தில் அதிகமான கரோட்டினாய்டுகளை உற்பத்தி செய்யும்.

தற்பொழுது தென் அரைக்கோளத்தில் கோடை காலம் ஆகும். எனவே தான் இந்த விசித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று கூறினார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாட்டில் இதுபோன்ற நிகழ்வு குறித்து கூறியுள்ளார். அவர் இதை ‘தர்பூசணி பனி’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர் பேராசிரியர் பிமல் படேல் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு

News Editor

கொரோனா பிடியிலிருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்-அமெரிக்க விஞ்ஞானிகள்…

naveen santhakumar

கொரோனா வைரஸால் பூமிக்கு விளைந்த நன்மை….

naveen santhakumar