உலகம்

125 நாட்களுக்குப் பின் திறப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 125 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. பூங்கா ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குப் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

ஊட்டி

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களாக மூடப்பட்டன. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன.

சுற்றுலா

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் மீண்டும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், சுற்றுலாத் தலங்களை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.

ALSO READ  27 எஸ்.பி.க்கள் இடமாற்றம்- தமிழக அரசு…! 

இந்நிலையில், இன்று (23ம் தேதி) முதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறைக்குச் சொந்தமான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்கள், கோத்தகிரி நேரு பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றை தடுக்க இன்ஹேலர் அல்லது மாத்திரை – தீவிர ஆய்வில் ஸ்வீடன் விஞ்ஞானிகள்

News Editor

பிரித்தானிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இந்தியர்

Admin

அமெரிக்காவில் புலிக்கும் கொரோனா வைரஸ்…..

naveen santhakumar