உலகம்

கொரோனா தொற்றை தடுக்க இன்ஹேலர் அல்லது மாத்திரை – தீவிர ஆய்வில் ஸ்வீடன் விஞ்ஞானிகள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரிஸ்:

கொரோனா தொற்றை தடுக்க தற்போது தடுப்பூசி செலுத்தி கட்டுப்படுத்தி வருகிறோம் . தடுப்பூசி தயாரிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டு தொற்று அதிகமாகி வருகிறது.

எனவே இதற்கு மாற்றாக இன்ஹேலர் அல்லது மாத்திரை மூலம் கொரோனா தொற்றை தடுக்க ஸ்வீடன் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள்.

Covid-19 vaccine nationalism in India, Europe keep world's poor waiting,  Europe News & Top Stories - The Straits Times

தெற்கு ஸ்வீடனினில் உள்ள அறிவியல் பூங்காவான மெடிகன் வில்லேஜ் ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானி இஞ்செமோ ஆண்டர்சன் மிகச் சிறிய பிளாஸ்டிக் இன்ஹேலரை பயன்படுத்தி வருகிறார்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு இன்ஹேலர்களை உருவாக்கும் இந்த குழு, இப்போது கொரோனாவை தடுக்கும் இன்ஹேலர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஹன் வபோர்க் தெரிவித்துள்ளார்.

ALSO READ  வாரம் 4 நாட்கள் அலுவலகம் வந்தால் போதும்

இந்நிறுவனம் தயாரிக்கும் மருந்தை குளிர்பதன வசதி தேவையில்லாமல் மிக எளிதாக விநியோகிக்க முடியும் என்றும் சுகாதார பணியாளர்களின் தேவை இல்லாமல் மக்களாகவே பயன்படுத்த இயலும் என கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் பேராசிரியர் ஓலா வின்கிஸ்ட் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

ALSO READ  அதிர்ஷ்டமான நாளில் சீன மக்களுக்கு நேர்ந்த சோகம்

பவுடர் வடிவிலான இந்த தடுப்பு மருந்து எலிகளுக்கு அளித்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மனிதர்களிடம் ஆய்வுகளைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்திட்டுள்ளனர்.

Budesonide, a cheap asthma drug, can alleviate covid-19 at home | The  Economist

இந்த மருந்து மாத்திரை வடிவிலோ அல்லது இன்ஹேலர் வடிவிலோ தயாரிக்கப்பட்டு மக்களிடையே வினியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் டிக்டாக்-க்கு தடை…. 

naveen santhakumar

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு கொரோனாவா????

naveen santhakumar

கொரோனா வைரஸால் சீனாவில் இறப்பு எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது

Admin