உலகம்

ஜாகிர் நாயக்கின் Peace TV-க்கு ரூ.2.76 கோடி அபராதம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’க்கு 300,000 பவுண்ட்  அபராதம் விதித்தது பிரிட்டன்.

மும்பையைச் சேர்ந்தவரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகருமான ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு ஒழுங்கு முறை அமைப்பான ‘OFCOM (ஆஃப்காம்)’, 3 லட்சம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளது.

பீஸ் டிவி நிறுவனம் பிரிட்டனில் வெறுப்புணர்வைத் (Hate Speech) தூண்டும் நிகழ்ச்சிகளையும் மக்கள் மனதை புண்படுத்தும் நிகழ்ச்சிகளையும் (Highly Offensive) ஒளிபரப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாம் வகுத்துள்ள ஒளிபரப்பு விதிகளை மீறியதாக பீஸ் டிவி (உருது) ஒளிபரப்பு நிறுவனத்துக்கு 2 லட்சம் பவுண்ட் மற்றும் பீஸ் டிவி நிறுவனத்துக்கு ஒரு லட்சம் பவுண்ட் அபராதம் (ரூ.2 கோடியே 75 லட்சத்து 51,773) விதித்துள்ளது. மேலும் பீஸ் டிவி நிகழ்ச்சிகளால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆஃப்காம் அமைப்பு கூறியுள்ளது.

ALSO READ  அடேங்கப்பா… உலக நாடுகளையே ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்

Peace TV (உருது) லைசன்ஸ் உரிமையை கிளப் டிவி (Club TV) வைத்துள்ளது. மொத்தமாக பீஸ் டிவியின் உரிமை லார்டு புரோடக்சன் லிமிட்டட் (Lord Production Ltd) வைத்துள்ளது. 

ஆங்கிலம், வங்காளம், உருது மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் Peace TV (அமைதி தொலைக்காட்சி) துபாயில் இருந்து ஒளிபரப்பாகிவருகிறது. இதன் நிறுவனர் மற்றும் தலைவராக ஜாகிர் நாயக். தற்போது மலேசியாவில் தங்கியுள்ள ஜாகிர் நாயக்கை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  நேபாள பிரதமர் கே.பி. ஒலி பதவி விலக கூறி ஆளும் கட்சி போர்க்கொடி… 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனித எலும்புக்கூடுகளுடன் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பேய் படகு..! 

naveen santhakumar

Angry Birds படத்தில் வரும் பன்றி போன்ற 3000 ஆண்டுகள் பழமையான பன்றி பொம்மை அகழ்வாய்வில் கண்டெடுப்பு… 

naveen santhakumar

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானிக்கு கொரோனா… 

naveen santhakumar