உலகம் மருத்துவம்

இ-சிகரெட் உபயோகிப்பவர்களை எளிதில் தாக்கும் கொரோனா வைரஸ்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டை பயன்படுத்துவார்கள் எளிதில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக கூடும் என அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் பேசிய நியூயார்க் நகர மேயர் பில் ட’ பிளாசியோ (Bill De’ Blasino):-

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வயதானவர்கள் தான். ஆனால் இவர்களில் 22 வயதான நல்ல ஆரோக்கியம் உள்ள இளைஞரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை.

அதனால் இவர் ஒரு இ-சிகரெட் உபயோகிப்பாளர் (Vaper) என்று மட்டும் தெரிகிறது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எச்சரித்திருந்தார்.

ALSO READ  கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில்களில் A/C பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது நிறுத்தம்- ரயில்வே உத்தரவு....

இதனிடையே, Johns Hopkins Bloomberg School of Public Health-ஐ சேர்ந்த Dr. Joanna Cohen மேயர் பில் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இதனால் இவர்களின் உடல் எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும். இவர்களால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட இயலாது.

ALSO READ  தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு: கனடா அதிரடி… 

எனவே சிகரெட் மற்றும் இ-சிகரெட் இரண்டையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

U.S. Centers for Disease Control and Prevention கூறுகையில்:-

பெரும்பாலான நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் கொரோனா நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகிறார்கள் எனக்கூறி உள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செப்டம்பர் 22: உலக காண்டாமிருகங்கள் தினம்

News Editor

சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கொடுரமாக விபத்து….17பேர் உயிரிழப்பு….

naveen santhakumar

ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

naveen santhakumar