இந்தியா

தெலுங்கானாவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காட்டுப்பன்றிகளுக்கு உயிருடன் இரையான குழந்தை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:-

ஹைதராபாத் அருகே 4 வயது குழந்தையை காட்டுப்பன்றிகள் உயிருடன் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைதாபாத் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இதுகுறித்து ஹைதராபாத் காவல் துறை செய்தி தொடர்பாளர் ஸ்ரீநிவாஸ் கூறுகையில்:-

இந்த தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் பெயர் ஹர்ஷவர்தன். சிறுவனின் குடும்பத்தினர் சிங்காரேனி காலனி பகுதியில் வசித்து வருகிறார்கள்.

சிங்காரேனி காலனி பகுதி அருகே உள்ள குப்பை கிடங்கில் ஏராளமான காட்டுப்பன்றிகள் சுற்றி வருகிறது. சிறுவன் மாலை 4 மணி அளவில் வெளியே விளையாட சென்ற பொழுது காட்டுப்பன்றிகள் சிறுவனை தாக்கிய இழுத்துச் சென்று உடல் பாகங்களை கடித்து குதறி உள்ளது.  

ALSO READ  ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் வரலாறு காணாத அளவிலான கனமழை:

இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கூறிய சிருங்காரேனி காலனி பகுதிவாசிகள் இதுபோன்ற காட்டுப்பன்றிகள் தாக்குதல் அடிக்கடி நிகழ்கிறது என்றும் உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைத்து தர வேண்டியும் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இது போன்ற துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்றனர்.

ALSO READ  அசாம், மேற்கு வங்கம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் !

ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் தான்  சிறுவன் ஹர்ஷவர்தன் இருந்ததாக பாலாலா ஹக்குலா சங்கம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவிக்கு நிலவில் இடம் வாங்கிய கணவர்..!

News Editor

விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை மியா கலிஃபா ஆதரவு !

News Editor

பவானிபூர் இடைத்தேர்தல்- மம்தா பானர்ஜி வெற்றி

News Editor