உலகம்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆபத்தான திட்டத்தை கையில் எடுக்கும் நாடுகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மிகவும் ஆபத்தான ‘ஹெர்டு இம்யூனிட்டி தியரி’ (Herd Immunity Theory)  எனும் முறையை சில நாடுகள் கடைபிடிக்க துவங்கியுள்ளன.

ஹெர்ட் இம்யூனிட்டி தியரி என்பது மக்கள் தொகையில் 50-60 சதவீதம் மக்கள் நல்ல உடல் நலத்துடன், நோய் பாதிப்பு குறைவாக ஏற்படும் உடல் நலத்தைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படட்டும் என்று நாடுகள் விட்டுவிடும். அவர்கள் தங்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மூலம் மீண்டு வருவார்கள்.

ALSO READ  செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா???

பொதுவாக எந்த ஒரு நோய் பாதிப்பில் இருந்தும் ஒருமுறை நமது உடல் மீண்டு விட்டாள், அந்த நோய் குறித்த செய்திகளை நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தனது நினைவில் வைத்துக்கொள்ளும். 

ஆகையால் மீண்டும் அந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மேற்கொள்ளும்.

ஆனால், இந்தக் கோட்பாட்டை நாடுகள் நடைமுறைப்படுத்தும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான இறப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, அதேசமயம், நாட்டு மக்களின் சுகாதார விஷயத்தில் பாதிப்பும், ஏற்படலாம்.

இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் வேறு சில நாடுகள் நாடுகள் இந்த கோட்பாட்டை கடைபிடிக்க துவங்கியுள்ளது. இதன்மூலம் இரண்டரை லட்சம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ALSO READ  தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !

இதுகுறித்து எச்சரித்துள்ள சுகாதார நிபுணர்கள் இந்த திட்டம் மிகவும் மோசமான அதேசமயம் மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனெனில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர் தனது நோய் எதிர்ப்பு சக்தியின் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் மீண்டு வரலாம் ஆனால் அவர் மூலமாக மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது  இன்று எச்சரித்துள்ளனர்.

இதனிடையே இங்கிலாந்தில் இதுவரை குரோனோ வைரஸ் பாதிப்பால் 71 பேர் உயிரிழந்துள்ளனர் 1950 பேர் இந்த அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சுரங்க தொழிலாளர்கள்

Admin

கொரோனாவால் இலங்கையில் முதல் மரணம்….

naveen santhakumar

அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியாக ஆண்களின் அடி மடியிலேயே கை வைத்தது கொரோனா வைரஸ்…..

naveen santhakumar