ஜோதிடம்

கொரோனா பரவல் இடையே மஹாராஷ்ட்ராவில் தேர்தல்… தேர்தல் ஆணையம் அனுமதி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

மஹாராஷ்ட்ரா ஆளுநரின் கோரிக்கையைத் தொடர்ந்து சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால், மகாராஷ்டிர முதல்வர் பதவியை இழக்கும் நிலையில் இருந்த உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியுள்ளது.

மகாராஷ்டிர சட்டமேலவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு தோ்தல் நடத்துமாறு மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, வியாழக்கிழமை கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்ட மேலவைத் தேர்தலை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  எம்.எல்.ஏ.,க்களுக்கு வாக்குரிமை! - தேர்தல் ஆணையம் அதிரடி!

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி பதவியேற்றாா்.

ALSO READ  உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை - தமிழக அரசு...!

எனினும், அவா் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாததால், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவையின் உறுப்பினராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாா். அவருக்கான 6 மாத காலஅவகாசம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சட்டப்பேரவை அல்லது மேலவையின் உறுப்பினராகவில்லை என்றால், அவா் முதல்வா் பதவியை இழக்க நேரிடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு

News Editor

தல 61 அப்டேட்: மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…!

naveen santhakumar

நம்ப முடியாத ஜோதிட உண்மை.. தம்பதிகளின் தாம்பத்ய உறவில் ராகு-கேது…

naveen santhakumar