இந்தியா

Bois Locker Room குரூப்பிற்கு Master Mind-ஆக செயல்பட்ட மாணவி- போலீசாருக்கு அதிர்ச்சி …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பள்ளி மாணவர்கள் சிலர் Bois Locker Room (பாய்ஸ் லாக்கர் ரூம்) என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் குரூப் ஒன்றை நடத்தி அதில் வயது குறைந்த பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து அது தொடர்பான ஆபாச உரையாடல்களை நிகழ்த்தினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வாய்ஸ் லாக்கர் ரூம் குரூப்-க்கு மாஸ்டர் மைண்ட் ஆக மாணவி ஒருவர் செயல்பட்டுள்ளார் என்ற மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து  காவல்துறை துணை ஆணையர் (Cyber Crime Unit) அனிஷ் ராய் (Anyesh Roy) கூறுகையில்:-

Bois Locker Room என்ற பெயரில் செயல்பட்டு வந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயது குறைந்த மாணவிகள் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த ஆபாசமான உரையாடிய உரையாடல்கள் குறித்த ஸ்க்ரீன் ஷாட்டுகள் சமூகவலைதளத்தில் உலாவந்தன. 

ALSO READ  விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த பிரியங்கா சோப்ரா:

இந்நிலையில் Snap Chat சமூகவலைத்தளத்தில் Bois Locker Room என்ற பெயரில் செயல்பட்டு வந்த மற்றொரு குரூப்பில் தனிபட்ட (One-To-One) உரையாடலில் ‘சித்தார்த்’ என்ற பெயரில் ஒரு பெண்ணை எவ்வாறு பாலியல்ரீதியான தாக்கியது (Aggravated Sexual Assault Plan) என்ற உரையாடல் நிகழ்ந்துள்ளதை கண்டறிந்தோம். 

மாணவி மேற்கொண்ட உரையாடல்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சித்தார்த் என்ற பெயரில் மாணவி ஒருவர்  போலியாக அக்கவுண்ட் ஆரம்பித்து உரையாடியதை கண்டுபிடித்தோம்.

சம்பந்தப்பட்ட மாணவனின் கேரக்டரை சோதிப்பதற்காகவும், இந்த மெசேஜ்-க்கு அவன் என்னவிதமான ரியாக்ஷன் கொடுக்கிறான் என்பதற்காகவும் இது போன்ற செயலை செய்ததாக மாணவி கூறியுள்ளார்.

இதைக்கண்டு மேற்கொண்டு உரையாட விரும்பாத அந்த மாணவன் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது நண்பர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ALSO READ  மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் கங்குலி அனுமதி..!

சம்பந்தப்பட்ட இருவர் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனினும் இது போன்ற போலி பெயரில் உரையாடல் நிகழ்த்துவது சட்டப்படி குற்றம் ஆனாலும் அந்த மாணவி எந்த தவறான நோக்கத்தோடு வேலை செய்யவில்லை என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டோம் என்றார்.

Bois Locker Room இன்ஸ்டாகிராம் குரூப்பின் அட்மினாக செயல்பட்டால் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான் மேலும் மற்றொரு மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது அவர்களிடம் கைப்பற்றப்பட்ட சாதனங்களில் இருந்து தான் இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது ஸ்னாப் சாட்டிலும் இதுபோன்ற உரையாடல் நிகழ்ந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

மொத்தத்தில் இதுபோன்ற குற்றங்கள் யார் செய்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் அனுப்பிய 2.6 டன் மாம்பழங்கள்!

naveen santhakumar

இனி சில்லறை இனிப்புகளுக்கும் தயாரிப்பு தேதி கட்டாயம்…

Admin

புதுச்சேரிக்கு கண்டிப்பாக மாநில அந்தஸ்து வேண்டும்; முதலமைச்சர் நாராயணசாமி

News Editor