இந்தியா

ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு மெயில்கள், மெட்ரோ, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரெயில்களும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 17ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஜூன் 30ந்தேதி வரையிலும்  பல்வேறு மாநிலங்களில் சிக்கிக்கொண்டுள்ள மக்களுக்கான (Stranded People) சிறப்பு ஷ்ராமிக் (Shramik) ரயில்கள் மட்டுமே இயங்கும்.

ALSO READ  கிறிஸ்துமஸை முன்னிட்டு “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி

மார்ச் 21 முதல் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்திய ரயில்வே தற்போது நாடு முழுவதும் 15 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது அவை டெல்லியில் இருந்து அகர்தலா, அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், பிலாஸ்பூர், சென்னை, திப்ரூகர், ஹவுரா, ஜம்முதாவி (Jammu Tawi), மட்கோன் (Madgaon), மும்பை, பாட்னா, ராஞ்சி, செகந்திராபாத் மற்றும் திருவனந்தபுரம் இடையே ரயில்கள் இயக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு ஹோட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி… 

naveen santhakumar

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ! 

News Editor

தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா..

Shanthi