உலகம்

அமெரிக்காவில் ஒரே தலையில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒரேகான்:-

அமெரிக்காவில் இரண்டு முகங்களுடன் கூடிய பூனைக்குட்டி ஒன்று பிறந்துள்ளது இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அமெரிக்காவின் ஒரேகான் (Oregon) பகுதியை சேர்ந்தவர் பி.ஜே. கிங் (B.J.King) இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார் இந்நிலையில்  சமீபத்தில் இவர் வீட்டில் வளர்த்து வந்த பூனை ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் அந்த குட்டிகளை கண்ட இவரது மனைவி கைலா (Kyla) ஆச்சரியத்தில் உறைந்து உள்ளார் ஏனெனில் இவர்கள் வளர்த்து வந்த பூனை என்ற ஆறுகுட்டி இடையில் 5 குட்டிகள் சாதாரணமாக இருந்தன ஒரே ஒரு குட்டி மட்டும் வித்தியாசமாக இருந்தது அதாவது அந்த ஒரே ஒரு குட்டிக்கு மட்டும் இரண்டு முகங்கள் இருந்தன உடனடியாக இது குறித்து அவரது கணவரிடம் கூறியுள்ளார்.

ALSO READ  பருவநிலை மாற்றத்தால் ஆபத்தின் விளிம்பில் குழந்தைகள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இதையடுத்து இந்த வித்தியாசமான பூனைக்குட்டிக்கு இந்த குடும்பத்தினர் பிஸ்கட்ஸ் மட்டும் கிரேவி என்று அந்த குடும்பத்தினர் அழைத்து வருகின்றனர்.

இந்த பூனைக்குட்டி குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பி.ஜே.கிங்  பதிவேற்றியுள்ளார். 

இந்த பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் உள்ளன அவற்றில் இரண்டு ஜோடி கண்கள் 2 மூக்கு 2 வாய் என்று அமைந்துள்ளது. 

ALSO READ  இரண்டு ஆறு; இரண்டு வண்ணம்- ஒன்றாக சங்கமம்… 

இந்தப் பூனைக்குட்டிக்கு பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என்று அழைத்து வந்தாலும் இதற்கு ஜேனஸ் (Janus) என்ற பெயரினை வைத்துள்ளனர் ஜேனஸ் என்பது பண்டைய ரோம கடவுளின் பெயராகும். ஏனெனில் ஜேனஸிற்கு மொத்தம் இரண்டு முகங்கள் இருக்கும் இதனால் இந்த பெயரிட்டு அழைத்து வருகிறார்கள்.

பொதுவாக இவ்வாறு பிறக்கும் விலங்குகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதில்லை எனவே இந்த பூனை குட்டி பிழைத்திருக்க வேண்டி கிங்கின் மனைவி கைலா பிரத்தியேக முயற்சிகள் எடுத்து வருகிறார். பெரும்பாலும் இவ்வாறு பிறந்து விலங்குகள் குறைந்த காலத்திலேயே இறந்து விடும் ஆனால் முன்பு இதே போன்று இரண்டு முகங்களுடன் சிறந்த பிராங்க் மற்றும் லூயி என்ற பூனை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது இவ்வாறு நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்த அரியவகை பூனை என்ற கின்னஸ் சாதனையை 2006 ஆம் ஆண்டு  படைத்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் கடும் நிலநடுக்கம் :

Shobika

மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

Admin

வூகான் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது கொரோனா வைரஸ்; பிரிட்டன்,நார்வே விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ! 

News Editor