உலகம்

பலூன் மூலம் வைரஸ் பரப்புகிறது வடகொரியா?? ஜப்பான் வானில் பறந்த விசித்திர பொருள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

ஜப்பானின் வடக்கு பகுதியில் பலூனை போன்ற விசித்திரமான வான் பொருள் ஒன்று திடீரென பறந்தது. இது வான்பொருட்கள் மூலமாக கொரோனா வைரஸை பரப்பும் வட கொரியாவின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செண்டாய் நகரில்  வானில் திடீரென்று பலூன் ஒன்று பறந்தது. இதையடுத்து அந்நகரில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறுகையில்:-

அதிகாலை நேரத்தில் திடீரென்று பலூன் என்று தோன்றியது. அதன் ப்ரோபெல்லர்கள் சுழன்று கொண்டிருந்தது. திடீரென்று தோன்றிய அந்த பலூன் சில மணி நேரம் வானில் சுற்றியது. மேகமூட்டம் ஏற்பட்டதை அடுத்து அந்த பலூன் வானிலிருந்து மறைந்தது.

ALSO READ  நீர்த்தேக்கத்துக்குள் விழுந்த பேருந்து- 21 பேர் பலி… 
courtesy

வானில் திடீரென்று பலூன் தோன்றிய நிகழ்வு ஜப்பான் முழுவதும் பரபரப்பானது. வடகொரியா இதுபோன்ற பலூன் மற்றும் வான்பொருட்கள் மூலமாக கொரோனா வைரஸை பரப்புகிறது என்று செய்திகள் உலா வரத் தொடங்கியது. 

இதுகுறித்து செண்டாய் நகர அரசு அதிகாரிகள் கூறுகையில்:-

ALSO READ  கி.வீரமணி திடீரென மருத்துவமனையில் அனுமதி!

இந்த பலூன் தோன்றியது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. யார் இந்த பொருளை வானில் பறக்கவிட்டது, எங்கிருந்து, என்ன காரணத்திற்காக வந்தது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறுகையில்:-

இந்த வான்பொருள் அனேகமாக வானிலை தொடர்பான தகவல்களை பெறவும், வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்டதாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இதனை ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் அனுப்பவில்லை என்று கூறினார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

News Editor

கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்ட சீன அரசு

Admin

யூடியூப் சேனலில் மதிப்பீடு செய்து ஆண்டுக்கு 185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்…

Admin