உலகம்

சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள முப்படைகளையும் தயார் செய்யும் தைவான்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


தைபே:-

சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் முப்படைகளையும் தயார் செய்யும் வேலையில் தாய்வான் அரசு இறங்கியுள்ளது.

ஹன் குரங்கு (Han Kuang Exercise) என்ற பெயரில் வருடம்தோறும் தைவான் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் 36வது இராணுவப் பயிற்சி தைச்சுங் கடற்கரையில், நடந்த ராணுவ ஐந்து நாள் ஒத்திகையில், கலந்துகொண்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தின.

போர் விமானங்கள் வானில் இருந்து குண்டு மழை பொழிந்து சரியாக இலக்குகளை தாக்கி அழித்தது மற்றும் பீரங்கிகள் இலக்குகள் மீது குண்டு மழை பொழியும் பயிற்சியில் ஈடுபட்டன.  

மேலும் ஏவுகணைகள் தாங்கிய ட்ரக் வாகனங்களும் இந்த பயிற்சியில் ஈடுபட்டன. இந்த ராணுவ பயிற்சியை அந்நாட்டின் அதிபர் சாய் இங் வென் ராணுவ உடை அணிந்து கொண்டு பங்கேற்றார்.

ALSO READ  ஒமைக்ரான் தொற்று அச்சம் : தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயம் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

முக்கிய அம்சமாக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து டார்பிடோக்கள் மூலம் இலக்கை துல்லியமாக தாக்கும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

8,000 வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில், சீன அரசு தன் ராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்தி வரும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறை தைவான் அதிபார பொறுப்பேற்றுள்ள சாய் இங் வென் (Tsai Ing-wen) சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் தைவான் அஞ்சப் போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் உலகிற்கு எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் எங்களது உறுதியை காட்டுவதற்காக இந்த பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளோம். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை காத்துக் கொள்வதற்காகவும் இந்த பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

ALSO READ  டிக்டாக் செயலியை மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த அனுமதி:டொனால்டு டிரம்ப்……

தாய்வான் தன்னை தனிநாடாக கூறி வருகிறது ஆனால் சீனா அதை ஏற்க மறுத்து தாய்வான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது தாய்வான் சீனாவிலிருந்து தெற்கு சீன கடலில் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 25 மில்லியன். சீனா தென் சீனக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைப்பதால் தென்சீனக் கடலில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளும் சீனாவிற்கு எதிரணியில் திரண்டுள்ளன. தற்பொழுது நேபாள் போன்ற சிறிய நாடுகள் இந்தியாவுடன் பாராட்டுவது போன்று தாய்வான் சீனாவுடன் பகை பாராட்டி வருகிறது. நேபாள் இந்தியாவில் சீண்டுவதன் பின்னணியில் சீனா உள்ளது என்று கூறுவது போல தாய்வான் சீனாவை சீண்டுவதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவிக்கு தலைவாரியது குத்தமா? … கைது செய்த குவைத் அரசு

Admin

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: உதவிக்கரம் நீட்டும் வீரர்கள்

Admin

இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சிறுமி!!!!!அடுத்து நேர்ந்த சோகம்…..

naveen santhakumar