உலகம்

டிக்டாக் செயலியை மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த அனுமதி:டொனால்டு டிரம்ப்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்: 

சீனாவின் டிக்டாக்(tik tok)செயலி அமெரிக்காவில் ஒராக்கிள்(oracle) மற்றும் வால்மார்ட்(walmart) நிறுவனங்களுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தினை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டிரம்ப், “டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பட்டேன்ஸ், ஒராக்கிள்(oracle) மற்றும் வால்மார்ட்(walmart) ஆகியவை மூன்றும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டிக்டாக், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும்”.

ALSO READ  ஜப்பானின் அடுத்த பிரதமரானார் ஃபுமியோ கிஷிடா…!

ஒப்பந்தத்தின் மூலம் புதிய நிறுவனத்தின் 53% சதவீத பங்குகளை அமெரிக்கர்களும் 36% சதவீத பங்குகளை சீனர்களும் வைத்திருக்க வேண்டும். முக்கிய தொழில்நுட்பங்களுக்கும், அமெரிக்கர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்கும் ஆரக்கிள் நிறுவனம் பொறுப்பேற்கும் என்று டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்துள்ள டொனால்டு டிரம்ப் இதன் மூலம் டிக்டாக் பயன்படுத்தும் அமெரிக்கர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாது  25,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலஸ்தீனத்திற்கு 2 மில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி… 

naveen santhakumar

ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் முடிவு:ஈரான்!

Admin

மூணு குழந்தை பெத்துக்கலாம் …. இங்கல்ல சீனாவில் …

News Editor